சங்கரிக்கு தொடர்ந்து தடை: சுமாவிற்கு தொடர்ந்து பாதுகாப்பு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமாக வீ.ஆனந்தசங்கரியும் தலைவராக த.இராசலிங்கமும் செயற்பட முட்டுக்கட்டைகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அரவிந்தனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீக்கத்திற்கு எதிரான தடை எதிர்வரும் 12த் திகதி வரை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கியஸ்தரான அரவிந்தன் கட்சியில் வீ.ஆனந்தசங்கரியின் தனிப்பட்ட போக்கிற்கு எதிராக கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக சங்கரி அறிவித்திருந்தார்.

இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழககிலேயே கட்சியிலிருந்து நீக்குவதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


“நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. காரணம் அறிவிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நேற்று மதியம் முதல் இவ்வாறான செய்தி ஊடகங்களிற்கு கசியவிடப்பட்டுள்ளது.

எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments