அழுத்தம்:போராட்டம் ஒத்திவைப்பு!



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு ஒருவாரத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுடன் கலந்துரையாடிய பின்னர், இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் திட்டமிடப்பட்ட நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு செல்லப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கம் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன எச்சரித்திருந்தன.

அரச வங்கிகள் மற்றும் பிற அரச நிறுவனங்கள் அரசு சலுகைகளை வழங்கியுள்ளன.ஆனால் தனியார் வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்கத் தவறிவிட்டன.

பெரும்பாலான தனியார் வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் தங்களது சொந்த விதிகளின் படி செயல்படுகின்றன.

அத்துடன் மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளை செலுத்தும் போது அதிக மற்றும் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன என்றும் இந்த சங்கங்களும் குற்றம் சுமத்தியுள்ளன.


No comments