அநீதி இழைப்பு! போராட்டத்தில் பணியாளர்!!


வவுனியாவில் நகரசபை நிர்வாகம் தனக்கு அநீதி இழைத்ததாகக் குற்றம் சாட்டி படிப்பகப் பணியாளர் கோல்டன் என்பவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவருடன் பணியாற்றுபவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

படிப்பகத்தில் (நூலகம்) கடந்த 20 வருடங்களாக கோல்டன் பணியாற்றி வருகின்றார். அவர் அங்கு பணியாற்றும் சக பணியாளர்களின் உரிமைக்காக கடந்த காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருந்திருந்தார். அதற்கு பழிவாங்கும் வகையில் நகரசபை நிர்வாகத்தினால் தனக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


படிப்பகத்தில் தனது பணியிலிருந்து இடை நிறுத்தி நகரசபை பூங்காவில் சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியே  அவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கு மீண்டும் படிப்பகத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் நகரசபை நிர்வாகமோ அவரின் நியமனம் குறித்த வேலையே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் னைத்து ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சுழற்சி முறையில் பணியினை மாற்றி வழங்கும் முகமாகவே பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அப்பணியாளருக்கு எங்களால் அநீதி இழைக்கப்படவில்லை என்று நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


No comments