காணி அதிகாரம் தருகிறார் டக்ளஸ்!



13வது திருத்த சட்டத்தின் கீழாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அதன் அமைச்சரான டக்ளஸ் தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயினும் ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கணிசமானவை வடக்கு மாகாண ஆணையாளருக்கு வழங்கப்பட்டாமல் இருந்து வந்த நிலையில் அதனையே டக்ளஸ் பெற்று வழங்கியுள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு  மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பான கடிதம் சில தினங்களில் சம்மந்தப்பட்ட ஆணையாளருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கரைச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே டக்ளஸ் இதனை தெரிவித்துள்ளார்.


அதாவது, நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கணிசமானவை வடக்கு மாகாண ஆணையாளருக்கு வழங்கப்பட்டாமல் இருந்து வந்தது.

குறிதத விடயம் வடக்கு மாகாண காணி ஆணையாளரினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த விவகாரத்தினை மத்திய அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, குறித்த அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டாராம்.


No comments