சிங்கள பகுதியில் சீன ஊசிக்கு வரவேற்பு:இந்திய ஊசிக்கு எதிர்ப்பு!



இந்தியாவினால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை, முதலாவதாக மூன்று  இராணுவத்தினர், இராணுவ வைத்தியசாலையில் இன்று காலை ஏற்றிக்கொண்டனர்.

இதேஆவளை ஐ.டி.எச் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இந்திய கோவி;ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட முதல் மருத்துவ அதிகாரி ஆவார்.

இதனிடையே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐடிஎச் இல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடந்த 23 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

நேற்று பகல் கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் நேற்று இரவு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறம் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களுக்கு அருகில், அவசர சிகிச்சைப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றியப் பின்னர், ஏதாவது, ஒவ்வாமை ஏற்பட்டால், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வைத்திய குழுவொன்று, அங்கு தயார் நிலையில் இருக்கும்  என்று தெரிவித்துள்ள சுகதார பிரிவு, தடுப்பூசியை ஏற்றும் முன்னர், ஏற்றிக்கொள்பவரின் விருப்பத்தைக் கடிதம் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது,

இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு சுகாதார அலுவலக சபையின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள, அதிருப்தியை வெளியிட்டு உள்ளவர்களுக்குப் பலவந்தமாக ஊசி ஏற்றப்படாதென, சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


No comments