முன்னணி ஒற்றுமை:அங்கயன் பாராட்டு!


வலிகாமம் வடக்கில் ஒரு அங்குல நிலத்தையும் புதிதாக விடுவிக்க இலங்கை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கட்சிகளால் வேறுபட்டிருந்தாலும் எம்.ஏ.சுமந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பிரச்சினைகளிற்காக ஒன்றிணைந்துள்ளமைக்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ள அங்கயன் இராமநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். No comments