மருத்துவமனையிலிருந்து வைகோவுடன் பேசிய ரஜினி!


ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தத்தின் காரணமாக அனுமக்திக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை குறித்து அவரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் இந்நிலையில் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சகோதரர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்தார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்த் விரைவில்குணமடைய வேண்டியுள்ளனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொலைபேசியில் ரஜினியிடம் பேசியதாகவும், தான் நலமுடன் இருப்பதாக வைகோவிடம் ரஜினி சொன்னதாகவும் தகவல்.

No comments