கடற்கரைக்கு தடை:குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்கு ஒகே?சுனாமி பேரவலத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட யாழ்.மாவட்ட செயலகத்திலோ குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் திரண்டு வந்து அஞ்சலிக்கப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்று காலை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.நிகழ்வில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றி, இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை வடமராட்சி கிழக்கில் அமைதியாக சுனாமியால் உயிரிழந்தோர் தூபியில் நினைவேந்தல் நடைபெற்றிருந்தது.

இதனிடையே யாழ். பல்கலைக்கழகத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோர் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.

குறித்த நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு பற்றுதலோடு சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.


No comments