கனடாவுக்கு வந்தடைந்தன மாடர்னாவின் கொரோனா தடுப்பூசிகள்


கனடாவில் நத்தார் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் முதல் முதலாக கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ருவிட்டர் பக்கத்தில் தகவலைப் பதிவிட்டிருக்கிறார்.

கொவிட்-19 வைரசுக்குரிய தடுப்பூசியான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளின் ஒரு பகுதி வந்தடைந்துள்ளது.

டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு முன் 168,000 தடுப்பூசிகள் வானூர்த்தி மூலம் வந்தடைந்துள்ளன.

கனடாவுக்கு 40 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கும் மாடர்னா  நிறுவனத்தின் ஒரு பகுதியே இவ்வாறு வந்தடைந்துள்ளன என அவர் தனது ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

No comments