இங்கிலாந்தில் புதன்கிழமை முதல் வருகிறது 3 அடுக்கு கட்டுப்பாடுகள்


இங்கிலாந்தில் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் 3  அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்குளிர்காலத்தில் மக்கள் கட்டுப்பாடுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், பேரழிவு தரக்கூடிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று லண்டன் மேயரின் செய்தி தொடர்பாளர் எச்சரித்து உள்ளார். 

இந்நிலையில், தற்போது, லண்டன், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகள் வரும் புதன்கிழமை முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் மூழ்கும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் அறிவித்துள்ளார்.

No comments