விறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2016ல் நடந்த தேர்தலில், 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில், 4.70 கோடி பேர் மட்டுமே, தபால் ஓட்டுகளை அளித்தனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க, அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை, 9.40 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலைவிட, இரண்டு மடங்கு அதிகம். கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஓட்டுப் பதிவு துவங்கியுள்ளது. 

No comments