வவுனியா நிதி மோசடியாளன் நாமலின் கூட்டு?வடமாகாணத்தை அதிர வைத்துள்ள 30மில்லியன் நிதி மோசடி நபர் நாமல் ராஜபக்ஸ சகபாடியென கண்டறியப்பட்டுள்ளது.

வுடமாகாணசபைக்குட்பட்ட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஊதிய கொடுப்பனவிற்கென ஒதுக்கப்பட்ட நிதியை கடந்த இரண்டு வருடமாக ஆட்டையினை போட்டு சுருட்டி ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்த நபரே அகப்பட்டுள்ளார்.

இதனிடையே இவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்ட பெண் உத்தியோகத்தர் ஒருவரும் அகப்பட்டுள்ளார்.

மாதாந்தம் ஜந்திற்கும் அதிகமான வங்கி கணக்குகள் ஊடாக நிதியை மாற்றி வைப்பிலிட்ட நிலையில் அவர் அகப்பட்டுள்ளார். 

கடந்த இரண்டு வருடங்களாக அரங்கேறிய இம்மோசடியை கண்டுபிடிக்க மாகாண கல்வி திணைக்களமோ வலயக்கல்வி அலுவலகமோ தவறியுள்ளது.

இதனிடையே மோசடி பணத்தில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்த இந்நபர் கார் உள்ளிட்டவற்றுடன் நாமலுடன் உறவை கொண்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. 


No comments