பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால்

கோழைத்தனமாக 26.10.1996 கொலை செய்யப்பட்டு 24 ஆண்டுகள் கழிந்து விட்டன. 

 புலம் பெயர் மண்ணில் இருந்து தமிழீழப் போராட்டத்தை நேசித்தவர்கள் , அதற்காக உழைத்தவர்கள் தங்கள் சுகத்தை மட்டும் நினைக்காமல் தமிழ் இனம் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று எண்ணிப் பயணித்தவர்கள்.

இவர்களது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26-10-2020 திங்கள் 15:00 மணிக்கு அவர்களை விதைத்த விதைகுழி அமைந்துள்ள பந்தன் பகுதியில் நடைபெற உள்ளது.


No comments