1001வது ஒப்பமிட்ட மொட்டு எம்பி?

 


றிசாட் பதுயுதீனின் தம்பியை மீள கைது செய்ய கோரி மொட்டு தரப்பால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில் 1001 பேர் ஒப்பமிட்ட விவகாரம் கேலிக்குள்ளாகியுள்ளது.

99வது நபரை தொடர்ந்து கையொப்பமிட்ட மொட்டு கட்சி எம்பியொருவர் 1001வது நபராக ஒப்பமிட்டுள்ளார்.

கோத்தா 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவளிக்க றிசாத்துடன் பேரம் பேசியதுடன் கைதாகியிருந்த அவரது தம்பியும் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டிருந்தார்.எனினும் இந்நாடகம் தெற்கில் அதிர்வலைகளை தோற்றுவித்திருந்த நிலையில் தற்போது மீள கைது செய்ய கோரி 1001 கையொப்பங்களுடன் மொட்டு எம்.பி.க்கள் எழுதிய கடிதமும் அம்பலமாகியுள்ளது.


முன்னதாக கடந்த ஜூன் 5, 2019 அன்று, விமல் வீரவன்ஸா ஒரு பொது மன்றத்தில், றிசாட் பதுயுதீனின் பயங்கரவாதத்தை ஆதரித்தார் என்பதற்கான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

எனவே அந்த எம்.பி., விமலிடமிருந்து ஆதாரங்களை எடுத்து சி.ஐ.டி.க்கு ஒப்படைத்து, சீனாவில் கோத்தபாய பெரியவர்களுடன் பணிபுரியும் போது அவருக்கு தொந்தரவு செய்யாமல் பதூர்டீனை கைது செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


No comments