அனலைதீவு விடுவிப்பு?
யாழ்.குடாநாட்டினில் முடக்கப்பட்டுள்ள தீவுகளுள் ஒன்றான அனலைதீவில் ஏற்படுத்தப்பட்டிருந்த முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் இதனை தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் அனலைதீவை சேர்ந்தவர்கள் என்ற வகையில் முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர்களிற்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது முடக்க எச்சரிப்பு விலக்கப்பட்டுள்ளது. 


No comments