யாழில் வாக்கு மோசடிகள்?


தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போதும் வாக்களிப்பு மோசடிகள் பற்றிய தகவல்களும் வெளிவந்த வண்ணமுள்ளது.


உரும்பிராயில் வாக்களிப்பு நிலையத்தை மாறி வந்த வாக்காளருக்கு வாக்குசீட்டு வழங்கப்பட்ட நிலையில் இறுதியில் உண்மையான வாக்காளர் வருகை தந்தமையால் குழப்பமேற்பட்டுள்ளது.

அதே போன்று சாவகச்சேரி நகரசபையின் தவிசாளரது கணவரது வாக்கையும் நேரகாலத்துடன் யாரோ போட்டுச்சென்றுவிட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார்.
அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய நாள் முன்னைநாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் - கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமாகிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் வாக்கு நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments