யாழ் மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்




யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்குப்பதிவுகள் அடங்கலாக 67.7% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி 4 இலட்சத்து 58,345 பேர் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது.

காலையிலேயே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளியினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர்.

யாழ். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும், கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் மொத்தமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

அதேபோன்று யாழ் நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையமுமாக மொத்தமாக 615 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஊர்காவற்றுறைத் தொகுதியில் 61.40%, வட்டுக்கோட்டையில் 55.12%, காங்கேசன்துறையில் 38.33%, மானிப்பாயில் 56.86%, கோப்பாயில் 52.38%, உடுப்பிட்டியில் 49.11%, பருத்தித்துறையில் 56.38%, சாவகச்சேரியில் 53.84%, நல்லூரில் 59.28%, யாழ்ப்பாணத் தொகுதியில் 61.34% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.

No comments