டக்ளஸ் காலத்திலேயே புலிகள் விடுவிப்பு?


அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியிலும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காலப்பகுதிகளில் தன் மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விளங்குகிறார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிடும் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார் .

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மத்தியில் கூட்டாட்சி யையும் மாநிலத்தில் சுயாட்சி யையும் வலியுறுத்தும் ஒரு கட்சியாக அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை தவறாமல் செயல்பட்டு வருகிறது .தமிழ் மக்களின் அரசியல் தீர்வு வேலைவாய்ப்பு அன்றாட பிரச்சனை ஆகியவற்றை முன்நின்று  தீர்க்கும் வல்லமை நமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா வால் மட்டுமே முடியும்.  அவர் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனை மற்றும் உட்கட்டுமானம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை திறம்பட மேற்கொண்ட பெருமை டக்ளஸ் தேவானந்தாவையே சாரும் தற்போதும் நடைபெறவுள்ளபாராளுமன்ற தேர்தலில் போட்டி இடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என சொல்ல முடியாத நிலையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்கள். 

ஆனால் நமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களுக்கு எதைச் செய்தது  எதைச் செய்யப் போகிறது என அழுத்தந்திருத்தமாக நமது தலைவர் ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் தெளிவாக கூறிவருகிறார் .டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 13000 முன்னாள் விடுதலைப்புலிப்போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆகவே சொல்வதைச் செய்யவும் செய்வதைச் சொல்லக்கூடிய தலைமைத்துவப் பாங்கு கொண்ட டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை மக்கள் பலப்படுத்தி அதன் பயன்களை மக்கள் அனுபவித்து கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments