படையினர் முகாமிலிருந்து சருகுப்புலி?


யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் படையினர் பேணி வரும் காடு மண்டிய பாதுகாப்பு வலயம் தொடர்ந்தும் மீள்குடியேறிய மக்களிற்கு தலையிடியையே தருகின்றது.

ஏற்கனவே சிறு கண்டல் காடுகளாக உள்ள பாதுகாப்பு வலய பகுதிகளில் பன்றிகளது நடமாட்டம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெல்லிப்பழை - மாவைகலட்டி கிராமத்திற்குள் புகுந்து சருகுப்புலி ஒன்று வீடொன்றிலிருந்த 13 ஆடுகளை கடித்து காயப்படுத்தியுள்ளதுடன், 6 ஆடுகளை கொன்றுள்ளது. 

இந்த சம்பவம் இன்று செவ்வாய் காலை இடம்பெற்றிருந்தது.

கிராமத்திற்குள் புகுந்த சருகுப்புலி வீட்டில் பட்டியிடப்பட்டு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்து குதறியுள்ளது. 

இதில் 13 ஆடுகள் காயமடைந்ததுடன், 6 ஆடுகளை கொன்றிருக்கின்றது. 
எனினும் சருகுப்புலி படையினரது பாதுகாப்பு வலயத்தினுளட இருந்தே அப்பகுதிக்கு வந்தது என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

No comments