தேரர்களிற்கு படிப்பிக்க தயார்:சுகாஸ்?


சிங்களவர்களின் வரலாற்று நூலான மகாவம்சம் ஏன் சிங்கள மொழியில் எழுதப்படாமல்  பாலி மொழியில் எழுதப்பட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுபாஷ் கேள்வி எழுப்பியுள்ளார் . 


யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழப்பினார் அவர் மேலும் தெரிவிக்கையில் சகோதர சிங்கள மக்களின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சம்  ஏன் சிங்கள மொழியில் எழுதப்படாமல் பாலி மொழியில் எழுதப்பட்டது தொடர்பில் ஆதாரங்கள்  பல இருப்பதாக தெரிவித்தார் .

 மகாவம்சத்தை எழுதும்போது சிங்கள மொழி பயனபாட்டில் இல்லாததன்  காரணமாக பாலி மொழியில் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் இதனை மகாவம்சத்தை அடிப்படையாக வைத்து சகோதர இனங்களையும் மதங்களையும் புண்படுத்தக் கூடிய வகையில் கருத்து தெரிவித்து வரும் தேரர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.  

 தமிழ் மக்கள் எந்த ஒரு இனத்தையும் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து இல்லை அவர்களுக்கு உரிய மதிப்பும் அந்தஸ்தையும் கொடுத்து வாழப்பழகியவர்கள் தமிழர்கள். அண்மைய நாட்களில்  கிழக்கு மாகாணத்தில் அமையப்பெற்ற தொல்பொருள் செயலணியில்  இடம்பெற்ற மரியாதைக்குரிய  அமில தேரர் தமிழ் மக்களையும் தமிழ் கலாச்சாரங்களையும் தமிழர் பண்பாடுகளையும் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் மன வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது . 

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்பது இன்று நேற்று சொல்லப்பட்ட விடயம் அல்ல 1925 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த s.w.r.d  பண்டார நாயக்காவடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் . அதுமட்டுமல்லாமல்   தமிழ் தேசிய தலைவர் அதிமேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான உடன்படிக்கையில் கூட வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என குறிப்பிடப்பட்டுள்ளது . அதுமாத்திரமன்றி பண்டா செல்வா ஒப்பந்தம் திம்புக் கோட்பாடு ஆகியவற்றிலும் வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகப் பகுதிகள் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது .ஆகவே வரலாறுகளை பற்றி கதைக்கும் மரியாதைக்குரிய தேரர்கள் குறித்த விடயங்களை பற்றி அலசி ஆராய்ந்த பின் கருத்து தெரிவிப்பது சாலச் சிறந்ததாகும்.  

ஆகவே தேரர்களுடன் இனவாதத்தையோ மதவாதத்தை யோ ஏற்படுத்துவதற்காக நாம் குறித்த கருத்தை முன்வைக்கவில்லை தமிழ் இனத்தின் அடையாளம் இருப்பு ஆகியன கேள்விக்குறியாக்கப்பட்டுவரும் நிலையில் அதனை பாதுகாப்பதற்காக பேசாமல்அ இருந்து விட முடியாது.  தமிழர்களுடைய வரலாறுகள்தொடர்பில் சச்சைக்  கருத்துக்களை தெரிவிக்கும் தேரர்களுடன் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்வதற்கு எச்சந்தர்ப்பத்திலும் நான் தயாராக இருக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் மேலும் தெரிவித்தார்

No comments