அமெரிக்காவில் காவல்துறையினரின் மற்றொரு மிருகச் செயல்!


அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் காவல்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்ட சம்பவத்தால் இனவெறிக்கு எதிராக அமெரிக்க நகரம் முழுவதும் போராங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நியூயார்க்கின் பஃபேலோவில் உள்ள சிட்டி ஹாலுக்கு வெளியே காவல்துறையினர் 75 வயதுடைய எதிர்பாளரான வயோதிபரை கைகளால் தள்ளி தரைவியல் வீழ்த்தும் சம்பவத்தால் சர்சையை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் குற்றவியல் பொறுப்புக்கான விசாரணையில் உள்ளது என்றும் விசாரணைகள் நட்தப்படுகிறது எனவும் பிராந்திய மாவட்ட வழக்கறிஞரின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

வயோதிபர் பின்புறமாக வீழ்ந்தால் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறியது. அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றார். காவல்துறையினர்  வயோதிபரைக் கடந்து நயாகரா சதுக்கத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவத்தில் ஈடுபட்டனர். இரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அச்செய்தியில் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments