அமெரிக்காவில் தொடரும் காவல்துறையின் வன்முறை! மற்றொரு கறுப்பினதவர் சுட்டுக்கொலை!

விசாரணைக்கு வர மறுத்த கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் அமொிக்காவின் , அட்லாண்டா பகுதியில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே குறித்த இளைஞர் ஒருவர் படுத்திப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த இளைஞரை விசாரணைக்காக வரமாறு கேட்டுக்கொண்டனர். குறித்த இளைஞர் விசாரணைக்கு வர மறுத்ததுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். 

உயிரிழந்தவர் 27 வயதுடைய ரேஷார்ட் புரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

தற்போது இளைஞனின் மரணம் குறித்த காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது. காவல்துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராங்டங்களை நடத்துகின்றனர்.

சம்பவத்தை அடுத்து அட்லாண்டா காவல்துறை பொறுப்பதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் பதவி விலகுவதாக அறிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய காவல்துறை அதிகாரி சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் கார்லோஸ் காம்போஸ் தெரிவித்தார். 

ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தில் காவல்துறையினர் மிருகத்தனத்தையும் இனவெறிக்கும் எதிராக கடந்த மூன்று வாரங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளி் போராட்டங்கள் நடத்துள்ளன. இன்நிலையில் ப்ரூக்ஸின் மரணம் மீண்டும் மக்களை ஆத்திரத்திரமூட்டச் செய்துள்ளது.

No comments