ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீது தாக்குதல்! இருவர் பலி!

மாலியின் வடக்கே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரின் வாகனஅணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை டெஸ்ஸாலிட் மற்றும் காவ் நகரங்களுக்கு இடையில் பயணித்துகொண்டிருக்கும் போதே தர்கிண்ட் கிராமத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த அமைதி காக்கும் படையினர் எந்த நாட்டவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஐ.நா அமைதி காக்கும் படையினர் திருப்பித் தாக்கியதில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments