கவுணாவத்தை இம்முறை இல்லை!


பிரசித்திபெற்ற கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர்  ஆலய வருடாந்த வேள்விப் பொங்கல் விழாவும் இம்முறை அடக்கமாக நடந்துள்ளது.

கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக  இம்முறை பொங்கல் நிகழ்வுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று சனிக்கிழமை நடந்துள்ளது.

அத்துடன் பொங்கல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே நடாத்தப்பட வேண்டுமென்பதால் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. 

இம்முறை ஆலயத்தில் வேள்விப் பொங்கல் விழாவை நடாத்துவதற்கு வலி.வடக்குப்  பிரதேச சபை முன்னர் அனுமதி வழங்கியிருந்த போதும் பொசன் நிகழ்வு காரணமாகப் பின்னர் அனுமதி மறுத்திருந்தது. இதன் காரணமாகவே, இம்முறை வேள்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

No comments