பொன்.சிவகுமாரனிற்கு அஞ்சலி!


போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் இன்று 6 ஆம் திகதி சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார்.

அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையந்துள்ள நிலையில் அதற்கு மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments