கொள்கைகளை மேப்படுத்தல் முயற்சியில் முகநூல்

Mark Zuckerberg
முகநூலின் கொள்கைகளை மேற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார். குறிப்பாக இனங்களிடையே சமத்துவம் குறித்த விடயங்களை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின் இனவெறிக்கு எதிரான போராட்டம் குறித்து வெளியிட்ட கருத்தில் இனவெறி மற்றும் வன்முறை (ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடத் தொடங்கினால், துப்பாக்கிச் சூடும் தொடங்கும் என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார். ) இருந்ததாக கீச்சகம் எச்சரிக்கை என்ற குறிப்புடன் குறிப்பிட்டு அப்பதிவை மறைந்து வைத்தது.

ஆனால் முகநூலோ அவரின் கருத்தில் எந்தவொரு எந்தவொரு பிழையும் இல்லை என அப்படியே விட்டுவிட்ட நிலையில் முகநூல் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அமொிக்க அதிபரின் கருத்தில் திருத்தம் செய்திருக்க வேண்டும் என நினைப்பதை நான் அறிவேன் என்று அதன் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

No comments