பிரான்சில் போராட்டத்திற்கு அழைப்பு! போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை

மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக உலகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் ஈபிள் கோபுரத்தடியில் வார இறுதி நாட்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் அருகிலும் ஈபிள் கோபுரத்தின் பின் அமைந்துள்ள புல்வெளியிலும் இனவெறிக்கு எதிராக நடைபெறும் போராடத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனா சமூக இடைவெளி மற்றும் பரவல் காரணங்களை காட்டி குறித்த போராட்டத்திற்கு பிரஞ்சுக் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

No comments