ஊடகப்படுகொலையாளிக்கு பதவியுயர்வு!


ஊடகப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளிற்கு பேர் போன மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ருவன் பிரசன்னா ஜெயக் டி அல்விஸ் சிஐடியின் புதிய இயக்குநராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் வெள்ளிக்கிழமை (29) நியமிக்கப்பட்டுள்ளார்.

சித்திரவதை தொடர்பாக ஏராளமான நீதிமன்ற ஆவணங்களில் பிரசன்னா டி அல்விஸ் குற்றஞ்சுமத்தப்பட்டவராவார். அதிலும் குறிப்பாக கோட்டபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியாவில் 2019 இல் பதினொரு தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கு உட்பட பல வழக்குகளில் பிரசன்ன டி அல்விஸ் பெயரிடப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் பல தமிழ் ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமை மீறல் விண்ணப்பங்களில் ஜனாதிபதி ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளியான பிரசன்ன டி அல்விஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வெற்றிவேல்; ஜசிகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ,ஜெயபிரகாஸ் ,சிற்றம்பலம் திசைநாயகம என பலரது கைது சித்திரவதைகளுடன் பிரசன்ன டி அல்விஸ் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments