நாடு திரும்புபவர்களிடையே கொரோனா?


கொரோனா ரைவஸ் தொற்று பரவலையடுத்து, நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சிலர், இன்று (02) பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் 291 பேர் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளனர். 

இதனிடையே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (01) இனங்காணப்பட்டோரில் நால்வர் பங்களாதேசில் இருந்து நாடு திரும்பியவர்கள் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்களாதேசில் இருந்து  மே மாதம் 24 ஆம் திகதி 276 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் சோதனை மூலமே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அத்துடன், ஒருவர் பெலருஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் ஏனையோர் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், தொற்றாளர்களாக பதிவான இராணுத்தினரிடமிருந்து வைரஸ் தொற்று மேலும் பரவுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (01) 10 பேர்  இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்றைய தினமும் முல்லைதீவில் கடற்படை மாலுமியெர்ருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறப்பிடத்தக்கது.

No comments