தாவூத்தை வவுனியாவிலிருந்து வெளியேற உத்தரவு?


வவுனியா கனகராயன்குளம் தாவூத் உணவகத்தின் உரிமையாளரை ஜீலை 08ம் திகதிக்;கு முன்னர் ஆக்கிரமித்துள்ள காணியை விட்டு வெளியேறுமாறு வடக்கு பிரதேச செயலகம் காலக்கெடு விதித்துள்ளது.

விடுதலைப்புலிகள் முன்னாள் போராளியொருவரது காணியை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்திவந்த தாவூத் பின்னராக வாடகையினை கூட வழங்க மறுத்ததுடன் காவல்துறை சகிதம் அப்போராளியை தாக்கி படுகாயம் விளைவித்துமிருந்தார்.

அத்துடன் குறித்த போராளி மீண்டும் சிறையிலும் அடைக்கப்பட்டுமிருந்தார்.
இந்நிலையில் காலம் மாறி குறித்த தாவூத் புதைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் சகிதம் கைது செய்யப்பட்டு சிறை செல்லவேண்டியேற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த காணியிலிருந்து வெளியேற தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments