லண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு! மகள் பலி!

தெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும் காயங்களுடன் உயிருக்கப் போராடடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாக்கிழமை மாலை 4 மணியளில் மிச்சம் லண்டன் வீதியில் அமைந்துள்ள படிப்பகம் அமைந்துள்ள பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன அடுத்தம் காரமாக தாய் மகளை கத்தியால் குத்தி தனக்கும் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் இதுவரை என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மருத்துவர்கள் விரைந்துள்ளனர். நோயாளரைக காவும் உலங்கு வானூர்தி வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்குச் சென்ற இருவரில் நான்கு வயது மகள் உயிரிழந்துள்ளார். 35 வயதுடைய தாய் அவசரப்பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிற்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக ஸ்காட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாரையும் காவல்துறையினர் தேடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments