மீண்டும் கைது வேட்டை!


முல்லைத்தீவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேப்பாபுலவைச் சேர்ந்த, நவரத்தினம் டிலக்சன் என்ற 25 வயதுடைய இளைஞனே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாதக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர், இந்த இளைஞனைக்கைது செய்வதற்கான ஆவணத்தை வழங்கி, கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

No comments