எவரும் துயிலுமில்லத்திற்குள் அரசியல் செய்ய அனுமதியோம்!

நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிற விடயம் என்னவென்று சொன்னால், எவரும் துயிலுமில்லத்திற்குள் வைத்து அரசியல்
செய்யக்கூடாது என்பது எனத் தெரிவித்துள்ள முல்லை ஈசன் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

சம்பவம் குறித்து அவர் கருத்துரைக்கையில்:-

இன்றைக்கு தேராவில் மாவீரர் துயிலுமில்ல இழைப்பாறும் மண்டபத்தின் வெளிப்புறத்தில் ஈபிடிபி கட்சியின் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த சரவணபவான் ஆகிய இருவருடைய சுவரொட்டிளும் ஒட்டப்பட்டுள்ளன.

இவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றால் வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டலாம்.
ஆனால் துயிலுமில்லத்திற்குள் அரசியல் ரீதியாக சுவரொட்டிகளை ஒட்டுவதையோ அல்லது படம் காட்டும் விளையாட்டுக்களைக் காட்டக்கூடாது.

நாங்களும் அரசியல் கட்சிளுடன் நிற்கிறோம். ஆனால் அந்த நடவடிக்கைகள் துயிலுமில்லத்திற்கு வெளியில் செய்கிறோம்.

மாவீரர்களின் தியாகம் நிறைந்த இந்த துயிலுமில்லத்தில் அரசியல் செய்யவும் கூடாது சுவரொட்டியும் ஒட்டக்கூடாது. சரவணபவன் எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர் தான். அவரின் இச்செயலை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யக்கூடாது திருத்திக் கொள்ள வேண்டும்.

எந்த துயிலுமில்லத்திலும் எந்தவொரு வேட்பாளரின் சுவரொட்டிகளும் ஒட்டக்கூடாது. இனிவரும் காலத்தில் இவ்வாறு யாரும் சுவரொட்டிகளை ஒட்டினால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும் என்பதை மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றேன் என்றார்.

இச்சம்பவம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுடன் உரையாடிய போது சுவரொட்டிகள் அகற்றப்படும் எனத் தெரிவித்திருந்ததாகவும் அவர் அதை அகற்றாத நிலையிலேயே ஈசன் அவர்கள் இக்காணொளியை வெளியிட்டதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments