கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரித்தானியா மாறலாம் என எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளில் கொரேனா தொற்று நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரித்தானியா உருவெடுக்கலாம் என பிரித்தானிய
அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜெரமி ஃபர்ரார் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக ஒவ்வொருநாளும் 1000 பேர் வரையில் கொரோனாவினால் உயிரிழப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பிரித்தானியாவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்து ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது இத்தாலியின் உயிரிழப்பு விழுக்காட்டிலும் அதிகம் என்தை அவர் குறிப்பிட்டுள்ளா,

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு குறையத் தொடங்கிவிட்டதை  நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

வைரஸ் சோதனைகளை முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டதால் இறப்பின் விழுக்காடு குறைத்துவிட்டதாகவும் அவர் மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments