ஈக்குவடோரில் 800 சடலங்கள் வீடுகளிலிருந்து அகற்றம்!

ஈக்குவடோர் நாட்டின் கொரோனாவால் வீடுகளில் உயிரிழந்தவர்களின் 800 சடலங்களை அந்நாட்டுக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


கொரானாவாவினால் மிகவும் பாதிக்கபட்ட குவாயாகு பகுதியில் அண்மைய வாரங்களாக 800 வரையான சடலங்களை வீடுகளிலிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா தொற்று நோயினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலையால் இறுதிச் சடங்குகள் காரணமாக பசிபிக் துறைமுக நகரில் உள்ள இடுகாடுகளில் புதைகுழி வெட்டும் வேலையாளர்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை.

இதனால் மக்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதிகளில் போடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்திருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments