தாயகத்தில் அமைதியான புத்தாண்டு?

கொரோனா தொற்றுக்கெதிரான ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் இம்முறை வடகிழக்கு தமிழர் தாயகம் தமிழ் புத்தாண்டை அமைதியாக
வீடுகளில் கொண்டாடுகின்றது.

எதிர்வரும் 16ம் திகதி வரை ஊரடங்கு தொடருமென அரசு அறிவித்துள்ள நிலையில் இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டினை வீடுகளிலிருந்து அமைதியாக கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று திங்கள் புத்தாண்டு பிறப்பினையடுத்து அமைதியாக ஆலயங்களில் வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.வீதிகள் இன்றும் வெறிச்சோடியிருக்க மக்கள் வீடுகளில் அமைதியாக புத்தாண்டை கொண்டாடினர்.

இதனிடையே இலங்கை படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தின் தாவடி கிராமம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காண பட்டவரின் கிராமமான தாவடி கிராமம் கடந்த சில நாட்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் இன்று திங்கள் காலை முதல் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments