மூத்த ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்!

நோய்வாய்ப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் தனது 65 ஆவது வயதில் நேற்று (21) காலமானார்.

நுவரெலியா - தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்ட நெடுஞ்செழியன் தனது ஊடக பயணத்தை தினபதி மற்றும் சிந்தாமணியின் ஊடாக ஆரம்பித்து - பின்னர் சக்தி ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணியாற்றினார்.

இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் நடுநிலை செய்தியாளராகவும், சர்வதேச செய்தி அறிக்கையிடலின் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் அவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

No comments