யாழுக்கு வந்தால் கொரோனா பரிசோதனை நிச்சயம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா (பி.சி.ஆர்) பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றி வந்த லொறிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி இன்று (27) 30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments