வருகிறது ஒருநாளில் 1000 சோதனை செய்யும் மெசின்

ஐடிஎச் வைத்தியசாலையில் புதிய கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இயந்திரம் ஒன்று மே 30ம் திகதி பொருத்தப்படவுள்ளது.

குறித்த இயந்திரத்தால் நாள் ஒன்றுக்கு 1000 பரிசோதனைகளை செய்ய முடியும்.

இதனை இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி விரைவில் தினமும் 2000 பரிசோதனைகளை செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று 1100 பரிசோதனைகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments