எவருக்கும் பாஸ் கிடையதாது

ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்தாஸ் தெரிவித்தார்.

இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அனைவரும் பாஸ் நடைமுறையைப் பின்பற்றுவதற்கும் வைத்திய சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள வைத்தியர்கள், இதனால் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். வெவ்வேறு தரப்பினரினால் வழங்கப்படுகின்ற பாஸ் நடைமுறையினால் குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் யார் பாஸ் வழங்கினாலும் இறுதியில் பிரதேச செயலாளர்களின் சிபாரிசு இருக்கின்ற பாஸிற்கு மாத்திரமே வைத்திய சான்றிதழ் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலங்களில் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும். தெற்கில் இருந்தும், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் வருகின்ற எவருக்கும் எமது மாவட்டத்தில் பாஸ் வழங்கப்படுவது இல்லை - என்றார்.

No comments