போதையில் மூழ்கிய பலருக்கு கொரோனா?

கொழும்பின் நெருக்கமான பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் பலர் போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோத பாணங்களுக்கு அடிமையானவர்கள் என்பதை புலனாய்வாளர்கள் மற்றும சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் (27) வெலிக்கடை பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுக்கு அடிமையான 48 பேர் கண்டறியப்பட்ட நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நெருக்கமான பகுதிகளில் வீட்டுத் தொகுதிகளில் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து விழிப்பாக இருக்குமாறும், அதுகுறித்து தகவல் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

No comments