அன்னை பூபதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று (19) காலை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு - நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த நிகழ்வை முன்னெடுத்தது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

No comments