அமொிக்காவில் முடக்க நிலைக்கு எதிர்ப்பு! மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பால் அமொிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அமொிக்காவின் பல பகுதிகளில் தொடச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. முடக்க நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தங்கள் கோபத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

டெக்சாஸ் பகுதியில் மக்கள் ஒன்று கூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

நியூ ஹாம்ப்ஷயரின் கான்கார்ட்டில் குளிர் மழையிலும் 400 பேர் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

டெக்சாஸ், மேரிலாந்து, இந்தியானா, நெவாடா மற்றும் விஸ்கான்சின் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

கலிஃபோர்னியா, மிச்சிகன், ஓஹியோ மற்றும் நியூ ஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய நாட்களில் இதுபோன்ற பல ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நடந்துள்ளன என  குறிப்பிடத்தக்கது.

டெஸ்டாசை மீண்டும் திறங்க வேண்டிய நேரம் இது, மக்களை வேலை செய்ய அனுமதிக்கும் நேரம் இது, அரசாங்கம் படை அல்ல, நான் எனது பொருளாதாரத்தை காற்பாற்ற விரும்புகிறேன், நான் வேலை செய்ய வேண்டும், நீங்கள் அணிந்திருக்கும் முகமூடி உங்கள் பேச்சு சுதந்திரத்தை இழந்ததைக் குறிக்கிறது, எனப் பல கோசங்களை போராட்டக் காரர்கள் முன்வைத்துப் போராடினர்



No comments