யோசித்து வெளியே வாருங்கள்:யாழ்.மாவட்ட செயலர்?நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய பொது மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் த.மகேசன்  பொது மக்கள் ஒவ்வொருவரும் தமது கடமைகளை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் இடர் வலயமாகப் பிரகரனப்படுத்தப்பட்டு கடந்த பல நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் நாளை முதல் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது. அதாவது காலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மிண்டும் அமுல்ப்படுத்தப்பட உள்ளது.

ஆகையினால் நீண்ட நாட்களின் பின்னர் இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொரோனோவிலிருந்து பாதுகாக்க சமூக இடைவெளியை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது.

எனவே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டு சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

No comments