புதிதாக இன்று 15:வீடு திரும்பும் நாடகத்தில் அரச கலைஞர்கள்!


இன்று மட்டும் இலங்கை முழுவதும் மேலும் 15 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 269ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் தொற்றுநோய் தடுப்பு பிரிவு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பூம்புகாரை சேர்ந்தவரை இன்று மாலை வீட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் தொற்று இருப்பதாக யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டவர்களில் நால்வர் குணமடைந்து தற்போது தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்திய நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனோ தொற்று நோயாளர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு பலாலியில் வைக்கப்பட்டிருந்த 20 பேரில் 16 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான யாழ்ப்பாணத்திலிருந்து 17 பேரும் மற்றும் முழங்காவிலில் இருந்து 4 பேருமாக மேலதிக சிகிச்சைகளுக்காக தொற்றுநோய் வைத்தியசலை மற்றும் வெலிக்கந்தை வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 7 பேர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப உள்ளதாக பணிப்பாளர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந் நிலையில் நேற்று இருவர் குணமடைந்து இன்று அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில் இன்று மேலும் இருவர் குணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே குறித்த நான்கு பேரும் குணமடைந்து தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்து விடுவிக்கப்படுகின்ற நான்கு பேரும் அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments