கொரோனாவுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த நபர்?


கொழும்பிலிருந்து வருகை தந்த கொரேனா நோய் காவி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தொடர்பில் யாழில் தேடுதல் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த பாரவூர்தியில் குறித்த நபர் யாழ்;ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதும் அவரது யாழ்.வதிவிட விபரங்கள் அறியப்படவில்லை.
மாங்குளம் தாண்டி எவரையும் செல்லவிடாது இராணுவம் தடுத்து வரும் நிலையில் குறித்த நபர் படையினரது கண்களில் மண்ணை தூவி யாழ்.வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பின் பிரதான கொரோனா தொற்று பகுதியிலிருந்து வருகை தந்துள்ள நபர் தொடர்பில் தேடுதல் தொடங்கியுள்ளது.
இதனிடையே  பேலிகொட மீன் வர்த்தக மத்திய நிலைய மீன் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் 500 பேரை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரி தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய, இவர்களுக்கு இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் மீன்களைப் பெற்றுக்கொண்ட பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து, இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments