மீளமைக்கப்பட்ட பலாலி தனிமைப்படுத்தல் மையம்:103 ஆகியது?


பலாலி தனிமைப்படுத்தல் மையத்தினை கையாண்ட படை அதிகாரிகள் ஜனாதிபதியின் உத்தரவையடுத்து கூண்டேர்டு அப்பணிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இராணுவ தளபதியின் பணிப்பில் மீளமைக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் மையத்தில் தற்போது 103பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி இராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக இன்று காலை அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் பேணப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சர்ச்சைக்குரிய சுவிஸ் போதகருடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவரின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே உரிய நடைமுறைகள் இன்றி தனித்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எஞ்சிய நால்வரும் கூட கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தில் ஆய்வுகள் தொடர்கின்ற நிலையில் மேலும் 99பேர் தெற்கிலிலுந்து அழைத்துவரப்பட்டுள்ளனர்.

No comments