கனடா உதயன் கொரோனா காவியதா?


கனடா உதயன் பத்திரிகையின் ஊடாக கொரோனா தொற்று தமிழ் மக்களிடையெ பரவியுள்ளதாவென்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனாவால் கணவன்-மனைவி என ஒரே குடும்பத்தில் இரு உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளது.

ரோறன்டோ பெரும்பாக்கத்தில், "கனடா உதயன்" தமிழ்ப் பத்திரிகை நிறுவனத்தின் விநியோகஸ்தராகக் கடமையாற்றிய தமிழரும், அவரது மனைவியும், கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர்.

மரணத்தைத் தழுவிய தம்பதிகளுக்கு 3 இளம் பெண்பிள்ளைகள் உண்டு. ஏற்கனவே, சுமார் 20 தமிழர்கள் கனடாவில் கொரோனோ காரணமாக பலியாகியிருப்பதாக, உத்தியோகபூர்வமற்றவகையில் அறியமுடிவதாக கனடா முன்னணி தமிழ் ஊடகவியலாளர் உதயன் எஸ்.பிள்ளை தெரிவித்துள்ளார்.

மேலும், கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகள்,கனடாவில் பரவலாக நகரங்களில் உள்ள தமிழர் வணிக நிலையங்கள், சைவ-கிறிஸ்தவ ஆலயங்கள்,தமிழ் சமூக அமைப்புக்களின் அலுவலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும், அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், தமது பத்திரிகை ஏப்ரல் 3 ஆம் திகதியும், அதன் பின்னரும் வெளிவரவில்லையென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளபோதிலும், கொரோனா வைரஸ் ஒருவரில் சுமார் ஒரு மாதமளவில் தங்கியிருக்கும் என்று கருதப்படும் நிலையில், குறைந்தது மார்ச் 13 ஆம் திகதியின் பின்னர், அப்பத்திரிகையின் பிரதிகளை பெற்றவர்கள் மற்றும் வணிக நிலையங்களில் அதன் பிரதிகளைப் புரட்டிப் பார்த்தவர்கள், உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் நாடுவது அவசியம் எனவும் முன்னணி தமிழ் ஊடகவியலாளர் உதயன் எஸ்.பிள்ளை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், குறித்த பத்திரிக்கை நிறுவனமும், அதன் விநியோக மைய்யங்களாக செயற்பட்ட நிறுவனங்களும், மக்களுக்கும், சமூகத்துக்கும் கூடுதல் தகவல்களை வழங்கி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனமும், தொடர்புபட்ட வணிக மற்றும் சமூக நிறுவனங்களும், தாமாக முன்வந்து, மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும் என்றும், பல தரப்புக்களும் கோரியுள்ளன.

No comments