கனடாவில் தமிழர்களான கணவன் மனைவி பலி!


புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா என்பவரும் நெடுந்தீவைச் சேர்ந்த அவருடைய துணைவியாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய நாட்களாக கொரோனாத் தொற்றினால் பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி உட்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பலர் உயிரிழந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments