பிரித்தானியப் பிரதமர் வீடு திரும்பினார்

கொரோனா தொற்று நோய்க்கு உள்ளான பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை  மருத்துவமனையிலிருந்து
வெளியேறி வீடு சென்றுள்ளார்.

கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய பொறிஸ் ஜோன்சன் 10 நாட்கள் தன்னைத்தானே தனிப்படுத்தியிருந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு மூன்று இரவுகள் தீவிர சிகிற்சைப் பிரிவில் சிகிற்சைகள் பெற்று சாதாரண சிகிற்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் முழுமையாக குணப்படுத்தப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

No comments